முக்கியச் செய்திகள் உலகம்

இங்கிலாந்தை மிரட்டும் உருமாறிய கொரோனா; 28 நாட்களில் 80,000க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

கொரோனாவுடன் உருமாறிய கொரோனாவும் வேகமாக பரவிவருவதன் காரணமாக, இங்கிலாந்தில் 28 நாட்களில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்ற அதர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் கொரோனா தொற்றால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். இப்போது அங்கே 30 லட்சத்து 17 ஆயிரத்து 409 பேருக்கு, கொரோனா தொற்று பரவி உள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தினந்தோறும் 60 ஆயிரம் பேர் வரை நோய்தொற்றுக்கு உள்ளாகின்றனர். கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவியதை விடவும், தற்போது உருமாறிய புதிய கொரோனா, 50 சதவீதத்துக்கும் அதிகமான பரவல் தன்மை கொண்டதாக இருக்கிறது என்று இங்கிலாந்து மருத்துவர்கள் கூறுகின்றனர். லண்டனில் தான் அதிக நோய்த்தொற்று பரவி உள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து ராணியும், இளவரசர் பிலிப்பும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக, இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரயில் இன்ஜின் தடம் புரண்ட விவகாரம்: மதுரை கோட்டம் விளக்கம்

Web Editor

நடிகர் விஷாலுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்

Gayathri Venkatesan

சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆய்வாளர்களுக்கு ஐஸ்கிரீம் அனுப்பி வைப்பு

Gayathri Venkatesan

Leave a Reply