பிரதமர் மோடி பற்றி அவதூறாக ட்வீட் செய்த காரணத்திற்காக விமானி ஒருவரை உடனடியாக பணியில் இருந்து நீக்கி GoAir ஏர்லைன் நிறுவனம் அதிரடி முடிவெடுத்துள்ளது.
இவர் இதற்கு முன்னதாக இந்திய விமானப் படையில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதன்பிறகு Aircosta, Invision Air உள்ளிட்ட ஏர்லைன்களில் விமானியாக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு கடந்த 2017ம் ஆண்டு GoAir ஏர்லைன் நிறுவனத்தில் இணைந்து தனது பணியை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் அவர் பிரதமர் மோடி குறித்து தகாத வார்த்தைகள் பயன்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து GoAir நிறுவனம் அவரை பணியில் இருந்து உடனடியாக நீக்கியுள்ளது. இதனை பதிவிட்ட சில நிமிடங்களில் அவர் அந்த பதிவை டெலிட் செய்துள்ளார். நிறுவனத்தின் விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் ஊழியர்கள் சமூக வலைதளங்களை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







