ஜிகா வைரஸ்: கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு சோதனை

ஜிகா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் குறைந்தாலும் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. அதன் பாதிப்பில்…

ஜிகா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் குறைந்தாலும் இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. அதன் பாதிப்பில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், அதற்குள் கேரளாவில் ஜிகா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அம்மாநிலத்தில் பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேனி மாவட்டம் குமுளி, போடிமெட்டு ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு சுகாதார மேற்பார்வையாளர்கள் குழு முகாமிட்டுள்ளது. கேரளாவிலிருந்து தமிழ்நாட்டி ற்குள் வருபவர்களை ஆய்வு செய்து, அவர்களிடம் ஜிகா வைரஸ் அறிகுறிகள் உள்ளதா என இந்தக் குழுவினர் பரிசோதித்து வருகின்றனர்.

மேலும், பரிசோதனை செய்தவர்கள் முடிவுகள் தெரியும்வரை, வீட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். மாவட்டம் முழுவதும் ஜிகா வைரஸ் தடுப்பு பணிக்காக 842 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.