நடிகர் சிவகார்த்திகேயன், தனது வீட்டில் வளர்த்து வரும் காய்கறிதோட்டத்தின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நடிகர்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து, அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சில நடிகர்கள் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக கட்டியுள்ள, தனது வீட்டில் தோட்டம் அமைத்துள்ளார்.

அந்த தோட்டத்தில் காய்கறிகள், கீரை வகைகளை வளர்ப்பதாகவும், அதில் விளையும் காய்கறிகளையே தனது வீட்டில் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் பத்திரமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள சிவகார்த்திகேயன், நமது வாழ்க்கையும் விரைவில் பச்சை பசுமையாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.