சந்தையில் புயலை கிளப்பிய கியா; ஒரே மாதத்தில் 31,716 முன்பதிவுகளை பெற்று புதிய சாதனை…

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய 2023 கியா செல்டோஸ் காரின் முன்பதிவு தொடங்கப்பட்ட ஒரு மாதத்தில் 31,716 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  2023 கியா செல்டோஸுக்கு ஒரே மாதத்தில் 31,716 முன்பதிவுகள் கிடைத்துள்ளதாக…

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய 2023 கியா செல்டோஸ் காரின் முன்பதிவு தொடங்கப்பட்ட ஒரு மாதத்தில் 31,716 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

2023 கியா செல்டோஸுக்கு ஒரே மாதத்தில் 31,716 முன்பதிவுகள் கிடைத்துள்ளதாக கியா இந்தியா அறிவித்துள்ளது. புதிய செல்டோஸிற்கான முன்பதிவு ஜூலை 14 அன்று தொடங்கியது. 2019 முதல், கியா 5 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 2023 கியா செல்டோஸ் விலை தற்போது ரூ.10.89 லட்சத்தில் தொடங்கி ரூ.19.99 லட்சம் வரை செல்கிறது.

2023 கியா செல்டோஸ் எஞ்சின்: 

2023-ம் ஆண்டில், கியா 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுக்குப் பதிலாக புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் மாற்றியுள்ளது. இது 158 பிஎச்பி பவரையும், 253 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 6-ஸ்பீடு iMT மற்றும் 7-ஸ்பீடு DCT உடன் வெளியிடப்படுகிறது.

2023 கியா செல்டோஸ் சிறப்பு அம்சங்கள்: 

பழைய மாடலில் இருந்து தற்போது காரின் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. செல்டோஸ் புதிய LED, ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில் விளக்குகள் ஆகியவற்றைப் பெறுகிறது. பம்பர் புதுப்பிக்கப்பட்டது  18 இன்ச் அலாய் வீல்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. செல்டோஸின் கேபின் புதிய டேஷ்போர்டு வடிவமைப்பு மற்றும் சென்டர் கன்சோல் அமைப்புடன் வெளியிடப்பட்டுள்லது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.