34.4 C
Chennai
September 28, 2023
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா தொழில்நுட்பம் செய்திகள்

விரைவில் வெளியாகும் ’ஐபோன் 15’ – தமிழ்நாட்டில் தயாரிப்பு பணிகள் தீவிரம்…

உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் ஆப்பிள் ஐபோன் சீரிஸின் அப்டேட் குறித்த தகவல்கள் மற்றும் ஐபோன் 15 வெளியீட்டு விபரங்கள் வெளியாகியுள்ளன. 

உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமாக இருக்கும் அமெரிக்காவின் ஆப்பிள் உலகம் முழுவதும் அறிமுகம் செய்ய உள்ள ஐபோன் 15 ஸ்மார்ட்போன் உற்பத்தியை இந்தியாவில் குறிப்பாக சென்னையில் துவங்கியுள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் பெரிய சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஐபோன் 13 மற்றும் 14-ல் பெரிய அளவில் அப்டேட்டுகள் இல்லை என்று ஐபோன் பிரியர்கள் மற்றும் கேட்ஜெட்ஸ் பிரியர்கள் கவலை அடைந்ததையடுத்து, ஐபோன் 15-இல் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று அந்நிறுவனம் அண்மையில் அறிவித்தது. ஐபோன்கள் பெரும்பாலும் ஒரே வடிவத்தில் மிகவும் சிறிய மாற்றங்களுடன் வெளியாவதே வழக்கம். ஆனால் இந்த ஐபோன் 15ல் முக்கியமாக மிகவும் புதிய வடிவத்தை பெற்றிருக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்கனவே ஐ-போன் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் வெளியிட உள்ள அதன் புதிய ஐபோன் 15 ஸ்மார்ட்போன்கள் உற்பத்தியை தமிழ்நாட்டில் தொடங்க உள்ளதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இந்தியா மற்றும் சீனாவில் இருந்து ஏற்றுமதியை சமநிலைக்கு கொண்டு வருவதை அந்நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.

மேலும், ஐரோப்பிய யூனியன் அனைத்து எலெக்ட்ரானிக்ஸ் ரீசார்ஜபிள் சாதனங்களிலும், டைப்-சி சார்ஜிங் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, ஆப்பிள் தங்களின் பிரத்யேக லைட்னிங் சார்ஜருக்கு விடை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாடல்கள் அறிமுகமாகும் முன்னர், பழைய மாடல்களின் மீது அபாரமான சலுகைகள் அறிவிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. அந்த வரிசையில் ஐபோன் 13 போன்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிகிறது. பிளிப்கார்ட்டின் புதிய பிக் பசாத் டமால் விற்பனையின் போது ஆப்பிள் ஐபோன் 13 மாடல் மீது இரண்டு மிகப்பெரிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்று 11% என்ற நேரடி தள்ளுபடி (Flat Offer); மற்றொன்று ரூ.61,000 வரையிலான எக்ஸ்சேன்ஞ் சலுகை (Exchange Offer).

இந்த சூழலில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் சிரீஸ் ஸ்மார்ட்போன்களை எப்போது வெளியிடும் என்ற தகவல்கள் கசிந்துள்ளன. இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், புதிய ஐபோன் 15 சீரிஸ் மொபைல்கள், செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram