சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 புதிய கூடுதல் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகியோரும் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 5 பேருக்கும் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். 5 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிள் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 18ஆக குறைந்துள்ளது.
வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மூத்த வழக்கறிஞர் பாலசுந்தரம் உள்ளிட்ட 56 வழக்கறிஞர்கள், விக்டோரியா கவுரியை நீதிபதியாக்க வலியுறுத்தி கடிதம் எழுதினர்.
நாளை விசாரணை
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.