சிவாகர்த்திகேயன் தற்போது சிவகுமார் முருகேசன் இயக்கும் ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். இக்கூட்டணியில்அண்மையில் வெளியான ‘தாய்கிழவி’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாளுக்கு பிறகு சிவகார்த்திகேயன் கிராமத்து கதை பின்னணியில் நடிக்க உள்ளதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற கோட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருந்தார். இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படம் ஒன்றில் சிவாகர்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் இப்படம் சயின்ஸ் பிக்சன் படமாக அமையும் என்றும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் அதன் பிறகு இப்படம் குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும் சிவகார்த்திகேயனும் புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமாக தொடங்கினார். இதனையடுத்து சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த சூழலில் சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு திரைப்படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த தகவல்களின் படி சயின்ஸ்-பிக்சன் திரைப்படமான இதில் குடும்பங்களுக்கும் பிடிக்கும் படி சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாற்றம் செய்யப்பட்ட இந்த புதிய திரைக்கதை தயார் செய்யப்பட்டுவிட்டது. தொடர்ந்து அடுத்த கட்ட தயாரிப்பு பணிகளை படக்குழு தொடங்க உள்ளது. மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் சிவாகர்த்திகேயன் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். உயர்தரமான விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்த ஆய்வுக்காக வெங்கட் பிரபு தலைமையிலான படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. அதுமட்டுமின்றி கதாநாயகியாக நடிக்க கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பாக்கியஸ்ரீ போர்ஸ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.







