அமெரிக்காவுடனான போர் மீண்டும் தொடங்கக்கூடும் – ஈரான் ராணுவம் எச்சரிக்கை…!

அமெரிக்காவுடனான போர் மீண்டும் தொடங்கக்கூடும் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரில் தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. மேலும் அமைதி பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஆனால் ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரத்தால் இருநாடுகள் இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஈரான் வழங்கிய புதிய சமரசர திட்டத்தில் திருப்தி இல்லை என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் அதனை நிராகரித்துள்ளார்.

இதனிடையே ஈரான் இராணுவத் தலைமையகத்தின் துணைத் தலைவர் முகமது ஜாஃபர் அசாதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது :

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மீண்டும் ஒரு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், அமெரிக்கா எந்த வாக்குறுதிகளுக்கோ அல்லது ஒப்பந்தங்களுக்கோ கட்டுப்படவில்லை என்பதை ஆதாரங்கள் காட்டியுள்ளன. ஈரானின் இராணுவம் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளது. பதிலடி கொடுக்கவும் முழுமையாகத் தயாராக இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.