தமிழ்நாடு, புதுச்சேரிக்கு புதிய பொறுப்பாளர் நியமனம் – அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய மேலிடப் பொறுப்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கான புதிய பொறுப்பாளர்களை அதிரடியாக நியமித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ஒப்புதலோடு இந்த புதிய நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் எம்.பி. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஏஐசிசி பொதுச் செயலாளருமான குலாம் அகமது மிர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, மற்றொரு முக்கிய மாநிலமான மேற்கு வங்கத்தின் காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளராக பிரகாஷ் ஜோஷி  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.