முக்கியச் செய்திகள் இந்தியா

குஜராத்தில் டிச.12 ல் புதிய அரசு பதவியேற்பு; விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்

குஜராத்தில் புதிய அரசு வரும் 12ம் தேதி பங்கேற்பதாகவும், இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள உள்ளதாகவும் அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளை கொண்ட இமாசச்சல சட்டசபைக்கு கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதேபோல் குஜராத்தில் 182 தொகுதிகளுக்கான சட்டச்சபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ம் தேதி 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் குஜராத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. குஜராத் முதலமைச்சர் வேட்பாளரான பூபேந்திர படேல் கட்லோடியா தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதேபோல் இமாச்சலில் பாஜக முதலமைச்சர் வேட்பாளர் ஜெயராம் தாகூர் முன்னிலையில் உள்ளார். இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

குஜராத்தில் 182 தொகுதிகளில் மதியம் 2 மணி நிலவரப்படி பாஜக 149 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி என அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 150 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பாஜக தொடர்ந்து 7-வது முறையாக குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்க உள்ளது. இதன் மூலம் பெரும்பான்மையை கடந்து பாஜக அரசு வெற்றி உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், குஜராத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல், வரும் 12ம் தேதி பாஜக தலைமையிலான அரசு பதவியேற்கிறது. முதலமைச்சர் பூபேந்தி படேல் பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்க உள்ளதாகவும் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணி இன்று மோதல்!

Halley Karthik

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை இழுக்கும் முயற்சியில் ஓ.பி.எஸ் தீவிரம்?

G SaravanaKumar

வியாபாரிகளிடம் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

G SaravanaKumar