கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்திலிருந்து மீண்டு வா இந்தியா- துபாய் அரசின் புதிய கூக்குரல், வைரலாகும் வீடியோ காட்சி!
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்துவருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகம் உள்ள உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதிப்பது, வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிப்பது, முழு ஊரடங்கை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசை பற்றிய பேச்சுக்கள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. இந்திய மக்கள், கொரோனாவிலிருந்து மீள வேண்டுமெனத் துபாயின் புது முயற்சி நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. துபாயின் அடையாளமாகவும் உலகின் மிக உயரமான கட்டிடமாகவும் புர்ஜ் கலிபா கட்டிடம் இருந்து வருகிறது. இந்த கட்டிடத்தில் நாட்டின் முக்கிய நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்த கட்டிடத்தில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை விளக்குகள் மூலம் வெளிப்படுத்தி stay strong India என்ற காட்சியினை வெளியிட்டுள்ளது அந்நாட்டு அரசு. கொரோனா இரண்டாம் அலையில் சிக்கித் தவித்து வரும் நிலையில் விரைவில் இந்தியா கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டும் என்ற இந்த கருத்து அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று நெட்டிசன்களிடையே பல்வேறு கருத்துக்களையும் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







