முக்கியச் செய்திகள் மழை தொழில்நுட்பம்

6 மாதங்களில் நியூராலிங்க் சோதனை தொடங்கும்; மனித மூளையில் சிப் பொருத்தும் எலோன் மஸ்க்

எலோன் மஸ்க் தனது நியூராலிங்க் என்ற நிறுவனத்தின் மூலம் மனித மூளையில் சிப் பொருத்தும் தனது நீண்ட நாள் முயற்சியை 6 மாதங்களில் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உலகில் மிகப்பெரும் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் பல போராட்டங்களுக்குப் பின் சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் மஸ்க் தனது மற்றொரு முன்னெடுப்பான  நியூராலிங்க் என்னும் நிறுவனம் மனித மூளையை கணினியுடன் இணைக்கும் இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கிவருகிறது. இந்த தொழில்நுட்பத்தை மனிதர்களிடம் பரிசோதித்துப் பார்ப்பதற்கு அனுமதி கோரி கடந்த 2019 ஆண்டு விண்ணப்பித்திருந்தது இந்நிறுவனம்.

இந்த மனித மூளையையும் கணினியுடன் இணைக்கும் தொழில்நுட்பத்தின் மூலம், நரம்பியல் குறைபாடு உள்ளவர்கள் தங்களது மூளையின் நரம்பியல் சொயல்மாடுகள்  மூலம் கணினிகளைக் கட்டுப்படுத்த வழிவகை செய்யும் வகையில் இந்த தொழில் நுட்பத்தை வடிவமைத்து வந்தனர்.

அதுமட்டுமில்லாமல், இந்த  தொழில்நுட்பம்   எதிர்காலத்தில் ஞாபக மறதி,  மற்றும் முதுகெலும்பில் ஏற்பட்ட பாதிப்புகளைக் குணப்படுத்த உதவலாம் என மஸ்க் முன்னதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இது எதிர்கால நோக்கம் என்பதால்  இதன் வளர்ச்சி படிப்படியாகவே சாத்தியம் என அவர் தெரிவித்திருந்தார்.  முதல் கட்டமாகப் பன்றிகளிடத்தில் பரிசோதிக்கப்பட இந்த தொழில்நுட்பம் ‘கம்ப்யூட்டர் சிப்’ பொருத்தப்பட்ட பன்றியான கெர்ட்ரூட்டின் நரம்பியல் செயல்பாடுகள் கணினி வாயிலாகக் கண்காணிக்கப்பட்டன.

பன்றிக்கு முன் உணவை வைத்து அதன் உடலில் ஏற்படும் நரம்பியல் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் பன்றியின்  மூளையில் பொருத்தப்பட்டுள்ள சிப் அனுப்பும் ஒயர்லஸ் சிக்கெனல்கள் வழியாக தரவுகள் பெறப்பட்டன.

இருப்பினும், நியூராலிங்க் மஸ்க்  2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள்  ஒப்புதலைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால்,  நியூராலிங்க் நிறுவனம் FDA அனுமதியைப் பெறுவதற்கான உள் காலக்கெடுவை மீண்டும் மீண்டும் தவறவிட்டது.

இந்நிலையில் இன்ன்ய்ம் 6 மாத காலத்திற்குள் மனித மூளையில் சிப் பொருத்துவதற்கு உரிய ஒப்புதல் பெற்று, அதிநவீன ரோப்போகள் உதவியுடன் மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தப்பட்டு கணினியுடன் மூளையைச் செயல்பாட்டை ஆராய உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு-ராஜஸ்தான் முதல்வரின் அசத்தல் அறிவிப்பு

Web Editor

திருமூர்த்தியை அழைத்துப் பாராட்டிய கமல்ஹாசன்

Arivazhagan Chinnasamy

பள்ளிகளில் ஆய்வுச் செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு எம்பி ரவிக்குமார் வேண்டுகோள்!