தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது- இபிஎஸ் குற்றச்சாட்டு

ஒரு ஆட்சி எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு திமுக ஆட்சியே சாட்சி. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையை தமிழக அரசு…

ஒரு ஆட்சி எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு திமுக ஆட்சியே சாட்சி. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலளார் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவையை தமிழக அரசு புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டி முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு கைவிட்டு வருகிறது. சொத்து வரி, மின்கட்டண உயர்வு ,பால் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். ஆட்சி பொறுப்பேற்ற 18 மாதங்களில் இதுவரை தமிழகத்திற்கு என்ன திட்டத்தை திமுக கொண்டு வந்தது.

ஒரு ஆட்சி எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு திமுக ஆட்சியே சாட்சி. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக கார்ப்பேரட் ஆட்சி நடக்கிறது. ஆனால் அதிமுக 10 ஆண்டுகால பொற்கால ஆட்சி நடத்தியது. அதிமுகவை பற்றி பேச ஒரு யோக்கியதை வேண்டும். அது முதல்வருக்கு கிடையாது.

அதிமுக ஆட்சியில் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டது. அதிமுக அரசு கொண்டு வந்த அற்புதமான திட்டம் அத்திகடவு – அவிநாசி திட்டம். கோவைக்கு அதிமுக அரசு கொண்டு மெட்ரோ ரயில் திட்டத்தை தற்போது நிறுத்தி வைத்திருக்கிறார்கள். வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட அதிமுக அரசு முயற்சித்தது. ஜி – ஸ்கொயர் நிறுவனத்துக்காக அந்த பேருந்து நிலையத்தை மாற்றுகிறார்கள்.

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடிய அன்னூரில் சிப்காட் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும். கல்வி கடன் ரத்து, பெண்களுக்கு ஊக்க தொகை உள்ளிட்ட எந்த அறிவிப்புகளையும் திமுக செயல்படுத்தவில்லை. சொத்து வரியை இந்த அரசு உயர்த்தி மக்கள் மீது சுமையை வைத்திருக்கிறார்கள். 53 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்திருக்கிறார்கள். அதை கைவிட வேண்டும். இதனால் கொங்கு மண்டலத்தில் தொழில் வளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்கள் கடுமையாக உயர்ந்துள்ளது. பால் விலை உயர்வு முழுவதும் நீக்கப்பட வேண்டும். அதிமுகவினரை அடக்க ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் முடியாது. பாரதியார் பல்கலைகழகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடை உடனே வழங்க வேண்டும். அதேபோல் கோவையில் செங்கல் சூளை நடத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அழிக்க வேண்டும். டான் டீ தேயிலை தோட்டத்தை வனத்துறைக்கு ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

கொப்பறை தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனைமலை – நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட்தேர்வு ரத்து செய்வோம் என்றார்கள். நாங்கள் என்ன நடவடிக்கையை எடுத்தோமோ, அதை தான் திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது.

இந்தியாவிலே தார்சாலை அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என்ற பெருமையை பெற்று தந்தது அதிமுக அரசு தான். பல்வேறு துறைகளில், மத்தியிலே அதிக விருதுகளை பெற்று தந்ததோம். திமுக அரசு பொறுப்பெற்றதிலிருந்து சட்டம் , ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. வேண்டுமென்ற குற்றசாட்டுகிறார்கள் என்று சொல்கிறார்கள். வயிறு எரிவதாக சொல்கிறார் ஸ்டாலின். ஆனால் மக்களின் வயிறு தான் எரிகிறது. ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சராக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

நாங்கள் கொண்டு வந்த திட்டங்கள் பற்றி ஸ்டாலின் அவர்களே நீங்கள் விவாதிக்க தயாரா? இந்த கூட்டத்துக்கு வருபவர்களை காவல்துறை தடுக்கிறது. தொடர்ந்து தடுத்தால் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். காவல்துறை நண்பர்களுக்கு சொல்கிறேன். ஆட்சி மாறினால் காட்சி மாறும். அதிமுகவில் இருந்து போனவர்கள் தான் திமுகவில் அமைச்சர்களா இருக்கிறார்கள். எனவே அவர்கள் பேச்சை கேட்டு நடந்து கொள்ளாதீர்கள்.

இன்று நடைபெற்ற போராட்டம் போல இதே கோரிக்களைக் வலியுறுத்தி வருகின்ற 9 ஆம் தேதி பேரூராட்சிகளிலும், 12ம் தேதி ஊரக உள்ளாட்ச்சிகளில், 13ம் தேதி நகராட்சி , மாநகராட்சிகளில் உண்ணாவிரத போராட்டம் தமிழகம் முழுவதும் நடக்கும். வருகின்ற நாடாளும்னற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.