முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

‘நெற்றிக்கண்’ – புதிய அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்!

நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள நெற்றிக்கண் திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

தமிழ் திரையுலகில் நயன்தாரா நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. இந்நிலையில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள நெற்றிக்கண் திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை விக்னேஷ் சிவன் தற்போது வெளியிட்டுள்ளார்.

கொரிய மொழியின் வெளியான ‘ப்ளைண்ட்’ எனும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகளில் இப்படத்தை திரையிடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மிலிந்த் ராவ் எனும் புதுமுக இயக்குநர் இயக்கியுள்ள இப்படத்தில், கண் பார்வையற்ற ஒரு பெண் தனது இதர திறமைகளைக்கொண்டு தொடர்ந்து கொலையில் ஈடுபடும் குற்றவாளி ஒருவரை கண்டுபிடிப்பதே கதையின் மையமாக அமைத்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் பாடல் குறித்த அப்டேட்டை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அதில், இப்படத்தின் பாடல் ஒன்று விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

நெற்றிக்கண்ணை தொடர்ந்து, அண்ணாத்த மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்கள் நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

பிரச்சார வாகனத்தில் ஏறி உதயநிதி ஸ்டாலினுக்கு முத்தம் கொடுத்த போதை வாலிபர்!

Niruban Chakkaaravarthi

நடிகை சுனேனாவுக்கு கொரோனா பாதிப்பு!

Karthick

விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான டெண்டர் தொடக்கம்!

Jeba