முக்கியச் செய்திகள் தமிழகம்

அரியலூரில் சாராயம் காய்ச்சி விற்ற 9 பேர் கைது!


அரியலூரில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.


தமிழகத்தில் கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளற்ற ஊரடங்கு மே 24ஆம் தேதி முதல் அமலில் உள்ளது. முன்னதாக கடந்த மே 10 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபானம் கிடைக்காமல் மதுவுக்கு அடிமையானவர்கள் தவித்து வருகின்றனர். சில இடங்களில் போதைக்காக சானிடைசரை குடித்தவர்கள் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்தது.

இதேபோல பல இடங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே மலத்தான்குளத்தில் கிராமத்தில் சாராயம் காய்ச்சி பல்வேறு கிராமங்களில் விற்பனை செய்துவந்துள்ளனர்.

இதுதொடர்பாக தகவலறிந்த காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று சாராயம் காய்ச்சி விற்ற வேளாங்கண்ணி ராபர்ட், பாலகுமார், பாலமுருகன், சக்தி துரை, அருள் பிரசாத், கரண், மோகன்ராஜ், மார்க்கண்டேயன், விஜய் ஆகிய 9 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து 15 லிட்டர் சாராயம், 200 லிட்டர் ஊரல் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

Advertisement:

Related posts

ஆந்திராவில் வீடு தேடிச் செல்லும் ரேஷன் பொருட்கள்!

Saravana

மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3வது அணி அமையும்: கமல்ஹாசன்

Saravana

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: மத்திய அரசு!

Karthick