சார்லஸ் சோப்ராஜ்: ‘பிகினி கில்லர்’ விடுதலை எப்போது? உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பிகினி கில்லர் என்றும் சீரியல் கில்லர் என்று கூறப்படும் சார்லஸ் சோப்ராஜை, ஏன் விடுவிக்கக் கூடாது என்று நேபாள நாட்டின் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய தந்தைக்கும்…

18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பிகினி கில்லர் என்றும் சீரியல் கில்லர் என்று கூறப்படும் சார்லஸ் சோப்ராஜை, ஏன் விடுவிக்கக் கூடாது என்று நேபாள நாட்டின் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்திய தந்தைக்கும் வியட்நாம் தாய்க்கும் பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ். பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற இவர், பிரான்சில் திருட்டுத் தொழில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி தாய்லாந்து சென்ற அவர், அங்கு பிகினி உடையணிந்த சில பெண்களை அடுத்தடுத்துக் கொன்று பிகினி கில்லராக அறியப்பட்டார்.

பின்னர் போலி பாஸ்போர்ட் மூலம் அங்கிருந்து தப்பி, இந்தியா வந்த அவர், டூரிஸ்ட் கைடாக பணியாற்றியபடி கொலை மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தார்.

பின்னர், நேபாள நாட்டுக்கு சென்று திருட்டு செயல்களில் ஈடுபட்டு வந்த சோப்ராஜ், லாரண்ட் கேரீர் ( Laurent Carrière ) என்ற 26 வயது கனடா பெண்ணையும், கான்னி புரோக்சிக் (Connie Bronzic) என்ற 29 வயது அமெரிக்க பெண்ணையும் 1975 ஆம் ஆண்டு அடுத்தடுத்த நாள்களில் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர், ஒரு கொலை வழக்கில் 21 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கிறார். அவர், 18 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், வயது மற்றும் உடல்நலனை கருத்தில் கொண்டு, முன்னதாகவே விடுவிக்கும்படி சோப்ராஜ் தரப்பில், நேபாள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பிய நீதிமன்றம் பதிலளிக்குமாறு நேபாள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.