நேபாளத்தில் பானிப்பூரிக்கு தடை!

நேபாளம் காத்மண்டு பகுதியில் பானிபூரி தடைசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வடபகுதியில் உள்ள பானிபூரி பலரின் விருப்பமான உணவாக உள்ளது. நம் ஊர்களில் மாலை நேரங்களில் கடற்கரை, சாலையோர கடைகளில் பானிபூரி…

நேபாளம் காத்மண்டு பகுதியில் பானிபூரி தடைசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வடபகுதியில் உள்ள பானிபூரி பலரின் விருப்பமான உணவாக உள்ளது. நம் ஊர்களில் மாலை நேரங்களில் கடற்கரை, சாலையோர கடைகளில் பானிபூரி விற்பனை படுஜோராக நடைபெறும். பானிபூரிக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு என்றால் அது மிகையல்ல.

இந்நிலையில் நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டு பகுதியில் பானிபூரி தடைசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாத்துறை அதிகாரிகள் கூறுகையில், லலித்பூர் மெட்ரோபாலிடன் சிட்டியில் காலா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. பானிபூரியில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் காத்மாண்டு நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் 7 பேர் மேலும் காலாராவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தற்போது நாட்டில் உள்ள மொத்த காலரா நோயாளிகளின் எண்ணிக்கை 12 ஆன உயர்ந்துள்ளது. இதையடுத்து நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும், நடைபாதை பகுதிகளிலும் பானி பூரி விற்பனையை நிறுத்த பேரூராட்சி நிர்வாகம் ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளது. பள்ளத்தாக்கில் காலரா பரவும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.