அதிமுக பொதுக்குழு; விசாரணைக்கு வரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கத் தீர்மானம் நிறைவேற்றியதாகக் கூறி, அதிமுக பொதுக்குழு, செயற்குழு மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு…

நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கத் தீர்மானம் நிறைவேற்றியதாகக் கூறி, அதிமுக பொதுக்குழு, செயற்குழு மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, பொதுக்குழுவைக் கூட்டலாம். ஒருங்கிணைப்பாளரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது எனவும், வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால், எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி அதிமுக பொதுக்குழு, செயற்குழு, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு எதிராகப் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘பூ.ராமு மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்’

அதில், கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில், உயர் நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை நிராகரித்தது, நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றியது, ஒற்றைத் தலைமை வேண்டும் எனக் கையெழுத்திட்டு ஒப்படைத்தது, ஜூலை 11-ல் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் கூடும் என அறிவித்தது ஆகியவை நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.