முக்கியச் செய்திகள் தமிழகம்

பிளஸ் 1 தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவி!

பிளஸ் 1 தேர்வில் தமிழ் மொழியில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி
மாணவியை பெற்றோர்களும் ஆசிரியர்களும் பாராட்டி வருகின்றனர்.

பிளஸ் 1 தேர்வில் தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற்ற பரமக்குடி அரசு பள்ளி மாணவி சங்கீதாவுக்கு பள்ளியில் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே விளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்
மகேஸ்வரி தம்பதியரின் மகள் சங்கீதா. இவர் மேலாய்க்குடி கிராமத்தில் உள்ள அரசு
பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் நடந்து முடிந்த +1 தேர்வில் தமிழில் 100 சதவிகித மதிப்பெண் பெற்றுள்ளார். பின்தங்கிய கிராமப்புற பள்ளியில் தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றதுடன் அனைத்து பாடங்களிலும் மொத்தமாக
538 மதிப்பெண் பெற்றுள்ளார்.

தமிழ் வழி கல்வியில் பயின்று தமிழ் மொழியில் சாதனை படைத்த மாணவியை ஆசிரியர்களும், பெற்றோரும் பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி பாராட்டி
வருகின்றனர். அரசுப் பள்ளியில் நூற்றுக்கு தமிழ் மொழியில் 100 மதிப்பெண் பெறுவதற்கு
உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு மாணவி சங்கீதா நன்றியை தெரிவித்துக்
கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேப்டன் வருண் சிங், மாணவர்களுக்கு எழுதிய உருக்கமான கடிதம் வைரல்

EZHILARASAN D

கொரோனா குணமடைய காயத்ரி மந்திரம், சுவாச பயிற்சி பலனளிக்குமா? ஆராய மத்திய அரசு நிதி உதவி

G SaravanaKumar

கொரோனாவை எதிர்க்கொண்டு மீண்ட இந்த தலைமுறை எதையும் சாதிக்கும்

Halley Karthik