நெல்லையப்பர் கோயில் பவித்ர உற்சவ திருவிழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்தி வீதிஉலா கோயில் உட்பிரகாரத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பவித்ர உற்சவம் என்ற விழா நடத்தப்படுவது வழக்கம். இதனையடுத்து இத்திருவிழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை சுவாமி அம்பாளை மண்டகப்படி மண்டபத்தில் எழுந்தருள செய்து, சிறப்பு யாகமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து சாமிக்கு பவித்ர மாலை அணிவித்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வீதி உலா கோயில் உட்பிரகாரத்திலேயே நடைபெற்றது. இந்நிகழ்வில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.







