நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா ரத்து!

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான காந்திமதி சமேத நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா, கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது. காந்திமதி சமேத நெல்லையப்பர் திருக்கோவிலில் 56 நாட்கள்…

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான காந்திமதி சமேத நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா, கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

காந்திமதி சமேத நெல்லையப்பர் திருக்கோவிலில் 56 நாட்கள் நடைபெறும் ஆனிப் பெருந்திருவிழா கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடியேற்றம், சுவாமி புறப்பாடு, வீதி உலா ரத்து போன்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், உற்சவர் அபிஷேகம் மற்றும் தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகளை இணையதளம் மூலமாக ஒளிபரப்ப உள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.