முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடக்கம்

32 வது ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க 11,000 மேற்பட்ட வீராங்கனைகள், வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு போட்டிகள் தொடங்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் என்பது உலக அளவில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு கனவாக இருக்கிறது. ஒலிம்பிக் என்பது வெறும் போட்டி மட்டுமல்ல அது விளையாட்டு வீரர்களின் நெடுநாள் உழைப்புக்கு கிடைக்கும் ஒரு சிறந்த அங்கீகாரம். கொரோனா பெறும் தொற்று அனைவரின் வாழ்வையும் புரட்டி போட்டிருக்கிறது. அந்த வரிசையில் கடந்த ஆண்டும் நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. தொற்று பரவல் பயம் ஒருபுறம் இருக்க, ஒட்டுமொத்த உலக வீரர்களின் கனவுகளை நினைவாக்கும் நாளாக இருக்கிறது இன்றைய நாள்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அமெரிக்காவைச் சேர்ந்த 613 வீரர்களும், ஜப்பானை சேர்ந்த 552 வீரர்களும், சீனாவை சேர்ந்த 406 வீரர்களும், ஜெர்மனியை சேர்ந்த 425 வீரர்களும், இந்தியாவைச் சேர்ந்த 125 வீரர்களும் களத்தில் இறங்க காத்திருக்கின்றனர்.

இந்தியா சார்பில் 6 அதிகாரிகளும் 20 வீரர், வீராங்கனைகளும் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள, இந்தியாவில் இருந்து மொத்தம் 127 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் அதிகபட்ச வீரர், வீராங்கனைகள் இவர்கள்தான். குறிப்பாக இந்திய வீரர்கள் இந்த முறை அதிக பதக்கம் வெல்வார்கள் என்று ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

தேர்வு நடத்த தயாராகும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்

Jeba Arul Robinson

வீணாகும் காய் கனிகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயு!

Jeba Arul Robinson

மது அருந்த அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த நண்பனுக்கு சரமாரி வெட்டு!

Jayapriya