முக்கியச் செய்திகள் தமிழகம்

சாதனாவிற்கு உதவித் தொகை வழங்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன்

தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ள ராமேஸ்வரத்தை சேர்ந்த சாதனாவுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.

ராமேஸ்வரம் சம்பை பகுதியைச் சேர்ந்தவர் ஆதி. இவர் அங்கு உள்ள ராமநாதசுவாமி கோயிலில் யாத்திரை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சாதனா, 19 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாட தேர்வாகியுள்ளார்.

சாதனா

இந்நிலையில், ராமேஸ்வரம் பகுதியில் கிரிக்கெட் மைதானம் இல்லாததால் நீண்ட தூரம் பயணித்து பயிற்சி மேற்கொள்ளவேண்டிய சூழல் நிலவுகிறது. இதனையடுத்து சாதனாவிற்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதனை நேரில் வழங்கிய உச்சிப்புளி விஸ்வநாதன், சாதனாவுக்கு கிரிக்கெட் விளையாட தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர் சேதம்: அமைச்சர்

Ezhilarasan

சகிப்புத் தன்மையை வளர்க்க ஸ்கர்ட் அணிந்து பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்!

Halley karthi

திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை 

Ezhilarasan