நெல்லை : குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்ட தாய்!

நெல்லை அருகே இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்தி குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முத்தையா. இவருடைய மனைவி முத்துலட்சுமி (27). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன் மனைவிக்குள் கருது வேறுபாடு காரணமாக நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி தன்னுடைய இரண்டு குழந்தைகளான முத்தமிழ்(4) மற்றும் சுசீலா(3) ஆகிய இருவரையும் கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். இதையடுத்து அவரும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இரண்டு குழந்தைகளை சடலமாக மீட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த தாய் முத்துலட்சுமியின் சடலத்தை கங்கை கொண்டான் தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.