தூத்துக்குடியில் வழக்கறிஞர்களுக்கு இடையே நடைபெற்ற மாநில அளவிலான ப்ரோ கபடி போட்டியில் நெல்லை வழக்கறிஞர்கள் சங்க அணி கோப்பை வென்றது.
தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு இடையிலான மாநில அளவிலான கபடி போட்டி துாத்துக்குடி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் 35-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர் அணிகள் பங்கு பெற்றன. இதன் இறுதிப் போட்டியில் சென்னை வழக்கறிஞர்கள் அணிக்கும், நெல்லை வழக்கறிஞர்கள் சங்க அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் நெல்லை அணி 25-க்கு 18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.எஸ். சுந்தர், தூத்துக்குடி மாவட்ட நீதிபதி செல்வம், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் கோப்பை மற்றும் ரூ.75,000 ரொக்க பரிசு வழங்கினர்.
அனகா காளமேகன்






