நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் நா ரெடி தா பாடல் ஸ்பாட்டிபை செயலியில் 5 கோடிக்கு மேல் ஸ்டிரீம் செய்யப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.
தற்போது படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து, இப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லியோ திரைப்படம் வெளிவர இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரிகிறது.
அதேபோல் நடிகர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி அன்று ‘லியோ’ திரைப்படத்தின் முதல் பாடலான “நா ரெடி” என்ற பாடலின் முழு லிரிக்கல் வீடியோ வெளியானது. இந்த பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருவதோடு, விஜய் ரசிகர்கள் இந்த பாடலை தற்போதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், லியோ படத்தின் நா ரெடி தா பாடல் 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
இந்த பாடல் வெளியான Youtube சேனலில் 10 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. 25 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. அனிருத் ஆத்மார்த்தமான இசையாலும், விஜய்யின் மெட்டுகளாலும் இந்தப் பாடல் ரசிகர்களுக்கு பெரும் கிரேஸாக அமைந்தது.
தற்போது நா ரெடி தா பாடல் ஸ்பாட்டிபை செயலியில் 5 கோடிக்கும் அதிகமான கேட்கப்பட்டுள்ளதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு கமல்ஹாசனை வைத்து விக்ரம் போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து லியோ படம் எடுத்துள்ளதால், இந்த கூட்டணி ஆல் டைம் ரெக்கார்டுகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








