முக்கியச் செய்திகள்உலகம்தமிழகம்செய்திகள்சினிமா

அமெரிக்காவில் ’ஜெயிலர்’ வெற்றி கொண்டாட்டம் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!!

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் நடைபெற்ற நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ பட வெற்றி விழா கொண்டாட்டத்தில், புதுக்கோட்டை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற செயலாளர் கே.கே.முருகு கலந்து கொண்டார்.

உலகம் முழுவதும் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி வரலாற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக நியூஜெர்சி மாகாண ரஜினி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் வெற்றி விழா கொண்டாட்டம், நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திரளான ரஜினி ரசிகர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம், ஆரத்தி எடுத்தல், திருஷ்டி கழித்தல், கேக் வெட்டுதல் என மிகச் சிறப்பாக ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், ரஜினிகாந்தின் பாடலுக்கு உற்சாக நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வெற்றி விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : இணையத்தை vibe செய்யும் ‘நா ரெடி’ பாடல்…

அமெரிக்காவில் நடிகர் ரஜினிகாந்தை கொண்டாடும் மாகாணங்களில், நியூஜெர்சி மாகாணம் எப்போதும் முதன்மையானது. அங்கு நடைபெற்ற ’ஜெயிலர்’ பட வெற்றி விழாவில், புதுக்கோட்டை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் கே.கே.முருகு பாண்டியன், தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். மேலும், நடிகர் ரஜினிகாந்தின் நண்பர், ரஜினி சுரேஷும் கலந்து கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை நியூஜெர்சி மாகாண ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பாலா, செந்தில் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது!

Web Editor

அமெரிக்காவில் எலான் மஸ்க்கை சந்திக்கிறார் நரேந்திர மோடி…

Web Editor

பேரன் திருமணத்தில் நடனமாடிய 96 வயது முதியவர் – வைரல் வீடியோ

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading