நெல்லை: பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து குட்செட்டுக்கு சென்ற பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பாலருவி விரைவு ரயில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு வரை நாள்…

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து குட்செட்டுக்கு சென்ற பாலருவி விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

பாலருவி விரைவு ரயில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு வரை நாள் தோறும் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 2018 ம் ஆண்டு முதல் இயக்கப்படும் இந்த ரயில் 35 நிறுத்தங்களில் நிறுத்தப்படுகிறது.

இந்த ரயில் வழக்கம்போல் நேற்று மாலை 4-05 மணிக்கு புறப்பட்டு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு அதிகாலை 4-50 மணிக்கு வந்தடைந்தது. அனைத்து பயணிகளும் இறங்கிய நிலையில் நெல்லை தச்சநல்லூர் அருகே அமைந்துள்ள குட்செட்க்கு சென்ற போது ரயிலின் ஒருபெட்டி திடீரென தடம்புரண்டது.

இதனையறிந்த லோகோ பயிலட், ரயிலை நிறுத்துமுன் தண்டவாளத்தில் இருந்து இறங்கிய ரயில் கீழே சில அடி தூரம் சென்றது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், ரயில்வே உயர் அதிகாரிகளும் தடம் புரண்டது குறித்து விசாரித்து வருகின்றனர். மீண்டும் குட்செட் கொண்டு செல்லும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.