கேரள மாநிலத்தில் காதலியைக் கொலை செய்த இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு சித்திலஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சூர்யப்ரியா (24). இவர் ஆளும் மார்க்சிஸ்ம் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்பிரிவான, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொத்தநல்லூர் பகுதி செயலாளராக இருந்து வந்தார். மேலும் அந்தப் பிரிவின் சார்பாக சித்திலஞ்சேரி பகுதியில் சில முக்கிய குழுக்களில் உறுப்பினராகவும் இருந்தார். மேலர்கோடு பஞ்சாயத்து உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
இன்று காலை சூர்யப்ரியா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது சுஜீஸ் என்ற 27 வயது இளைஞர் வீட்டுக்குள் நுழைந்து சூர்யப்பிரியாவை கொலை செய்திருக்கிறார். இதையடுத்து, அவராகவே காவல் நிலையம் சென்று கொலை செய்ததை ஒப்புக் கொண்டு சரணடைந்திருக்கிறார். அதன் பிறகு தான் கொலை சம்பவம் வெளியில் தெரிந்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் சூர்யப்ரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சூர்யப்ரியாவை கொலை செய்ததற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. முதல் கட்ட விசாரணையில் சூர்யப்ரியா, சுஜீஸ் இருவரும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. காதலித்த பெண்ணையே காதலன் கொலை செய்திருப்பது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் சுஜீஸிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-ம.பவித்ரா