அயோத்திதாசப் பண்டிதர் தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் முதன்மையானவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார்.
அயோத்திதாசப் பண்டிதரின் 181-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், வெங்கடராமன், சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.







