நீட் மறுதேர்வு: மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் – டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அறிவிப்பு!

நீட் மறுதேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பேருந்துகளில் இலவச பயண வசதி வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

இளநிலை மருத்துவ படிப்பில் சேர, நீட் எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, கடந்த மே 3ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், கேள்வித்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, கடந்த 12ம் தேதி, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு ஜூன் 21ம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

இதையொட்டி, ஜூன் 21ம் தேதியன்று நடைபெற உள்ள நீட் மறுதேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு டெல்லி போக்குவரத்து கழக பேருந்துகளில் இலவச பயண வசதி வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஜூன் 21 அன்று நடைபெறும் இளநிலை நீட்-2026 தேர்வில் பங்கேற் கும் மாணவர்கள், உரிய அடையாள அட்டையை காண்பித்து அனைத்து அரசு பஸ்களிலும் இலவசமாக பயணம் செய்யலாம். மாணவர்களின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில் எந்த சிரமமும் ஏற்படக்கூடாது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.