சாலமன் பாப்பையா மறைவு: உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!

சாலமன் பாப்பையாவின் மறைவு, பேச்சு உலகிற்கும் – பட்டிமன்ற உலகிற்கும் பேரிழப்பு என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறைந்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுக்கு எதிர்க்கடசித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழறிஞர் – பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் வயது மூப்பினால் உயிரிழந்த செய்தியறிந்து வருந்தினேன். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர்.= கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பேச்சாளர்.

தனது நகைச்சுவை கலந்த கருத்தாழமிக்க பேச்சினால், கடைக்கோடி மக்களிடமும் பட்டிமன்றங்களை கொண்டு சேர்த்தவர். ஏராளமான அடுத்த தலைமுறை தமிழ் பேச்சாளர்களை உருவாக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர். அய்யா சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றங்கள் இல்லாத விழாக்காலங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மக்களின் அன்பை பெற்றவர்.

அவரின் மறைவு, பேச்சு உலகிற்கும் – பட்டிமன்ற உலகிற்கும் பேரிழப்பு. அய்யா சாலமன் பாப்பையா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் – நண்பர்கள் – பட்டிமன்ற ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலையும் – இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பணிகள் என்றென்றும் தமிழ் மக்களின் மனங்களில் நிலைத்திருக்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.