2022 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு இதுவரை 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து 84,214 பேர் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தமிழக்தில் இருந்து 84,214 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஏப்ரல் 6ஆம் தேதி முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரத்தில் இருந்து அதிகபட்ட விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், அதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்தில் இருந்து அதிகபட்ச விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மொத்தம் உள்ள 11 லட்சம் விண்ணப்பதாரர்களில் 1.52 லட்சம் பேர் மகாராஷ்டிரத்தையும், 1.21 லட்சம் பேர் உத்தரப்பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








