முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மனைவியை பார்க்க வந்த தந்தையை வெட்டிக் கொன்ற மகன்

தஞ்சாவூரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் மனைவியையும், பிள்ளைகளையும் பார்க்க வந்த தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். 

 

தஞ்சாவூர் EB காலனி பகுதியை சேர்ந்தவர் கரும்பாயிரம். இவருக்கு ராதிகா, என்ற மனைவியும் மகன்களும் உள்ளனர். இந்நிலையில், கரும்பாயிரம் இரண்டாவதாக சிவசங்கரி என்பவரை திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளாக முதல் மனைவியை பற்றியும், பிள்ளைகளை பற்றியும் எண்ணாமல் இரண்டாவது மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இந்நிலையில், திடீரென முதல் மனைவியை பார்க்க வேண்டும் என்றும் கரும்பாயிரத்திற்கு தோன்றியுள்ளது. பின்னர் திருப்பூரில் இருந்து புறப்பட்டு முதல் மனைவியான ராதிகாவை பார்ப்பதற்கு தஞ்சை வந்துள்ளார். பின்னர் குடும்பத்துடன் பேசி கொண்டிருந்த போது, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கரும்பாயிரம் மண் வெட்டியால் ராதிகாவை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ராதிகாவின் மூத்த மகன் ஜீவா தந்தையை கண்டித்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஜீவா வீட்டில் இருந்த அரிவாளால் கரும்பாயிரத்தை சரமாரியாக வெட்டினார்.

 

இதனால் பலத்த காயமடைந்த கரும்பாயிரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கரும்பாயிரத்தின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி ஜீவாவை கைது செய்தனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு முதல் மனைவியை பார்க்க வந்த தந்தையை மகனே வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடியரசு தலைவர் மாளிகையின் சிறப்பம்சங்கள்!

G SaravanaKumar

தேசிய கல்விக் கொள்கை: ரமேஷ் பொக்ரியால் ஆலோசைன

Vandhana

பாஜக கனவுலகில் வாழ வேண்டாம்: ராகுல் காந்தி

Halley Karthik