முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்வை எப்போதும் ரத்து செய்ய முடியாது- அண்ணாமலை

நீட் தேர்வை எந்த காலத்திலும் ரத்து செய்ய முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் யாத்திரையை துவக்கும் இடத்திலேயே செல்வாக்கு இல்லை. எங்கள் முதல்வர் வருகிறார் வாருங்கள் என்று திமுகவினரை வைத்து கூட்டத்தை கூட்ட வேண்டிய நிலையில் தான் காங்கிரஸ் கட்சி உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

70 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா சீரழிந்ததை 8 ஆண்டு கால மோடி ஆட்சியில் எப்படி வளர்ச்சி பெற்றது? என்பதை ராகுல் காந்தி தனது பாதயாத்திரையில் தெரிந்து கொள்வார். நீட் தேர்வு எந்த காலத்திலும் ரத்து செய்ய முடியாது. திமுகவினர் நடத்தும் மருத்துவ கல்லூரிகளுக்காக நீட் தேர்வை ஒருபோதும் ரத்து செய்ய முடியாது.

பல காலகட்டங்களில் அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிரிந்துள்ளது. தமிழகத்தில் அதிக முறை ஆட்சி செய்த கட்சி அதிமுக. அதனை குறைத்து மதிப்பிட கூடாது. சமூக ஊடகங்களை கண்காணிக்க காவல்துறை சார்பில் சமூக ஊடக குழுக்கள் அமைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் அது நடுநிலையோடு நேர்மையாக செயல்பட வேண்டும். இந்திய அளவில் தமிழகத்தில் தான் குற்ற சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக தரவுகள் உள்ளது. முதல்வர் சட்ட ஒழுங்கு சரியாக உள்ளது என கூறுவதை ஏற்க முடியாது என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபேல் நடாலும் விலகல்

Gayathri Venkatesan

4 பேருக்கு மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர்- புதுச்சேரி அதிமுக

G SaravanaKumar

காகிதம் கொண்டு கலை படைப்புகள் செதுக்கும் அகமதாபாத் இளைஞர்!

Halley Karthik