சுவீடன் ஸ்டாக்ஹோமில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கம் வாங்கி பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. இவர் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு பங்கேற்ற 3 போட்டிகளிலும் மிக சிறப்பாக தினது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் சுவீடனில் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். இதற்கு அவர் நிகழ்த்திய தேசிய சாதனையை அவரே முறியடித்துள்ளார். இத்தொடரில் கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.31மீ ஈட்டி எறிந்து தங்கம் பதக்கம் வென்றார். இரண்டாம் இடம் பிடித்த இந்தியாவின் நீரஜ்சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றார்.
It felt amazing to be back on the Diamond League circuit and even better to get a new PB!
All the throwers put up a great show tonight for the crowd in Stockholm!Next stop ➡️ Representing 🇮🇳 at the World Championships in Eugene pic.twitter.com/OpiXyrp4wv
— Neeraj Chopra (@Neeraj_chopra1) June 30, 2022
இதுகுறித்து நீரஜ் சோப்ரா கூறுகையில், ‘இன்றைக்கு 90 மீட்டருக்கு மேல் வீசிவிடுவேன் என நினைத்தேன். அது நடக்கவில்லை. பரவாயில்லை, மெதுவான முன்னேற்றமும் நல்லது தான். இந்த வருடத்தில் இன்னும் பல தொடர்களில் பங்கேற்க இருக்கிறேன். அவற்றிலும் சிறப்பாக வீச வேண்டும்’ என கூறினார்.







