தேசிய மருத்துவர்கள் தினம் – பிரதமர் மோடி வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை ஒட்டி, மருத்துவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற மருத்துவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான பிதான் சந்திர ராய்-ன் பிறந்த நாள் மற்றும் மறைவு நாள் ஜூலை…

தேசிய மருத்துவர்கள் தினத்தை ஒட்டி, மருத்துவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற மருத்துவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சருமான பிதான் சந்திர ராய்-ன் பிறந்த நாள் மற்றும் மறைவு நாள் ஜூலை 1. அவரை கெளரவிக்கும் நோக்கில், இந்த தினம் தேசிய மருத்துவர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மருத்துவர்கள் தினத்தை ஒட்டி, மருத்துவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடினமாக உழைக்கக்கூடிய, உயிர்களை காக்கும் மேற்கொள்ளக்கூடிய, நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருக்கக்கூடிய அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், ஜூலை 1, பட்டய கணக்காளர் தினம் என்பதால், பட்டய கணக்காளர்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் அமைப்பதற்கான சட்டம், 1949ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இதனை நினைவுகூறும் வகையில் ஜூலை 1ம் தேதி பட்டய கணக்காளர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பட்டய கணக்காளர் தினமான இன்று பட்டய கணக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நமது நாட்டின் பொருளாதாரத்தில் பட்டய கணக்காளர்களின் பங்கு மகத்தானது என தெரிவித்துள்ளார். இந்த நாளில் அனைத்து பட்டய கணக்காளர்களுக்கும் தனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சிக்கும் பொருளாதார வெளிப்படைத் தன்மைக்கும் அவர்களின் உழைப்பு தொடரட்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.