நியூஸ் 7 தமிழின் புதிய முன்னெடுப்பான “வேண்டாம் போதை” எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 1500 மாணவ மாணவிகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
பொறுப்பும் பொதுநலனும் என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் புதிய முன்னெடுப்பாக “வேண்டாம் போதை” எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பக செம்மல் கே.கணபதி மேல்நிலைப்பள்ளியில், காலை 10 மணிக்குத் தொடங்கியது. அப்போது வரவேற்புரை ஆற்றிய நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல், சமூகத்தில் ஏற்படும் சிக்கல்கள், பேரிடர்கள் காலத்தில் பொறுப்பும் பொதுநலனும் எனும் தாரக மந்திரத்தைக் கொண்டு இது போன்ற நிகழ்வுகளை 9 ஆண்டுகளாக நியூஸ் 7 தமிழ் நடத்தி வருவதாகவும், தமிழ்நாடு அரசும் இது போன்ற பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வரும் சூழலில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் ’வேண்டாம் போதை’ என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்துகிறோம் எனக் கூறி, சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றார்.
https://twitter.com/news7tamil/status/1542744417299079168
அப்போது பேசிய அவர், நாளைய சமூகத்தின் சிக்கலாக, கேடாக மாறி வரும் போதைக்கு எதிராகச் சென்னை காவல் துறையுடன் இணைந்து விழிப்புணர்வு முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியிலிருந்து விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்குவது நியூஸ் 7 தமிழுக்கு மிகுந்த மகிழ்ச்சி எனக் கூறினார். தொடர்ந்து விருந்தினர்களுக்கு அவர் நினைவுப் பரிசு வழங்கினார்.
https://twitter.com/news7tamil/status/1542740848097443840
அதனைத்தொடர்ந்து, ‘வேண்டாம் போதை’ உறுதி மொழி வாசிக்கப்பட்டது. அதில், 1500 மாணவ மாணவிகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். அப்போது பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அவ்வப்போது யோசனை வரும். நியூஸ் 7 தமிழ் தொடங்கியுள்ள ’வேண்டாம் போதை’ விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு வாழ்த்துகள். இது ஒரு நல்ல நோக்கம். நாட்டிற்கும், சமூகத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்குப் போதை எதிரான ஒன்று. மொத்த சமூகத்திற்கும் மாணவர்கள் தான் தூதுவர்கள் எனக் கூறினார்.
https://twitter.com/news7tamil/status/1542740377660100608
அதனைத்தொடர்ந்து பேசிய சென்னை காவல் இணை ஆணையர் (வடக்கு) ரம்யா பாரதி, ‘வேண்டாம் போதை’ என்ற அருமையான நிகழ்ச்சிக்கு அழைத்த நியூஸ் 7 தமிழுக்கு காவல்துறை நன்றி தெரிவித்துக் கொள்கிறது. பள்ளிப் படிப்பு வயதில் இருக்கும் சந்தோஷம் எப்போதும் இருக்கத் தனி மனித ஒழுக்கம் உடன் இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், வேண்டாம் போதை என்பது தான் எங்களுக்கு வேண்டும். காவல்துறையின் கண்கள் காதுகளாக மாணவர்கள் இருக்க வேண்டும். சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.
https://twitter.com/news7tamil/status/1542747997443805185
வாழ்க்கையில் கடைசி வரை வேண்டாம் போதை என்றே இருக்க வேண்டும். மாநகர காவல்துறை நண்பனாக இருக்கும். மாணவர்களாகிய நீங்களும் நல்ல நண்பனாக இருக்க வேண்டும். நாளை உங்கள் பள்ளிக்குச் சிறந்த முன்னுதாரணமாக வர வேண்டும் எனக் கூறினார். இந்த நிகழ்ச்சியில், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மற்றும் லயன்ஸ் கிளப் டிஸ்டிரிக்ட் கவர்னர் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இன்று தொடங்கிய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜூலை 31-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







