என்.சி.எல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில், தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி அணி அபார வெற்றி பெற்றது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நெல்லை மண்டலத்தில் தூத்துக்குடி வ.உ.சி. பொறியியல் கல்லூரி அணியும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி அணியும் மோதின.
இதையும் படியுங்கள் : NCL 2023 : திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி த்ரில் வெற்றி
இதில் டாஸ் வென்ற தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரி அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 63 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, 64 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி அணி 6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக முத்து கணேஷ் 27 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.







