படப்பிடிப்பு தளத்தில் ஆடு, மாடுகளுடன் ’கீர்த்தி சுரேஷ்’ செய்யும் க்யூட் சேட்டைகள்; இன்ஸ்டாவில் வைரலாகும் வீடியோ!

கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தலத்தில் தான் ஆடு, மாடுகளுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில்,…

கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தலத்தில் தான் ஆடு, மாடுகளுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில், நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியத் திரைப்படம் ‘தசரா.’

மேலும் இப்படத்தில், சமுத்திரக்கனி, சாய்குமார், ஜரிணா வஹாப் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். சிங்கனேரி நிலக்கரி சுரங்கத்தைச் சுற்றி நிகழும் கதையாக, தசரா படம் அமைந்துள்ளது. நானி, முதல் முறையாக இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோ கதாபாத்திரத்தில் வருகிறார்.

’தசரா’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் மாதம் 30ம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தலத்தில் தான் ஆடு, மாடுகளுடன் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் லைக் செய்து, தங்களின் கருத்துகளை கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.