கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி அணிக்கு எதிரான போட்டியில் மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றை உறுதி செய்துள்ளது.
நியூஸ்7 தமிழ் நடத்தும் மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் போட்டிகள் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. ஐந்தாவது நாளான இன்று பிற்பகலில் நடைபெற்ற ஆட்டத்தில் தூத்துக்குடி வாகைகுளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணியும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி அணியும் களம் கண்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் டாஸ் வென்ற மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணியின் கேப்டன் சஜுன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக அணியின் கேப்டன் சஜுன் மற்றும் மரிய ஹரிஷ் இரண்டு பேரும் களம் இறங்கினர். இரண்டு பேரும் நிதானமாக களமாடிய நிலையில் அணியின் ஸ்கோர் அரை சதத்தை எட்ட உதவியது.
தொடர்ந்து 68 ரன்கள் எடுத்திருந்தபோது மாரி ஹரிஷ் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இதனை தொடர்ந்து மாரி ஹரிஷ் 29 ரன்களில் வெளியேறினார். அதன் பின்பு கேப்டன் சஜுன் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார் தொடர்ந்து வந்த வீரர்களும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் அணி ரன் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.
இதனால் மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணி 20 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழந்து 154 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சை பொறுத்த வரையில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி அணியின் சார்பில் சுதன் நான்கு ஓவர்கள் பந்துவீசி 25 ரன்கள் விட்டுக் கொடுத்தது மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.
இதனிடையே 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கன்னியாகுமரி அரசு மருத்துவமனை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரசன்னா மற்றும் மார்ட்டின் இரண்டு பேரும் களம் இறங்கினர் இரண்டு பேரும் நிதானமாக ஆடிய நிலையில் அணியின் ஸ்கோர் 28 ஆக உயர்ந்த போது மார்ட்டின் ஆட்டம் இழந்து வெளியேற அடுத்து வந்த ஹரிஹர ஸ்ரீ ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இதனிடையடுத்து களமிறங்கிய தேவா நிலைத்து நின்று அடி 33 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து சதீஷ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறி கொடுத்தனர். இதனால் 20 ஓவர்களில் முடிவில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டும் எடுத்தது. மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணியின் சார்பில் கேப்டன் அர்ஜுன் மற்றும் சாரதி இரண்டு பேரும் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணி அடுத்த சுற்றை உறுதி செய்துள்ளது.