NCL 2023 : 102 ரன்கள் வித்தியாசம்…. தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியை பந்தாடியது நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

என்.சி.எல் கிரிக்கெட் தொடரில், தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல்…

என்.சி.எல் கிரிக்கெட் தொடரில், தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நெல்லை மண்டலத்தில் இன்று நடைபெற்ற போட்டியில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணியும் தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரி அணியும் மோதின.

இதையும் படியுங்கள் : NCL 2023 : மதுரை தியாகராஜர் கல்லூரியை வீழ்த்தி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வெற்றி

இதில் டாஸ் வென்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு நூறு ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணியின் பிரபாகரன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.