முக்கியச் செய்திகள் சினிமா

நயன்தாராவின் த்ரில்லர் ஷூட்டிங் தொடங்கியது

அறிமுக இயக்குநர் படத்தில் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது.

நயன்தாரா ஏற்கனவே மாயா, ஐரா ஆகிய த்ரில்லர் படங்களில் நடித்துள்ளார். ’மாயா’ படத்தில் பேயாகவும் நடித்து மிரட்டினார். இப்போது, மீண்டும் த்ரில்லர் கதையிலும் நடிக்கிறார். குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்தப் படத்தில் , பொழுதுபோக்கு அம்சங்களும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்குகிறார். இவர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தமிழ் ஒளிப்பதிவு செய்கிறார். மாயா, கேம் ஓவர் படங்களுக்கு இசை அமைத்த யோஹன் இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தில் நயன்தாராவின் தோற்றம் முற்றிலும் புதுமையாக இருக்கும் என்று படக்குழு கூறியுள்ளது. இதன் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கி இருக்கிறது. ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

நயன்தாரா, இப்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’, விஜய் சேதுபதியுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவ நடித்து முடித்துள்ள ‘நெற்றிக்கண்’ படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்துள்ளார். மேலும் 6 படங்களில் அவர் நடிக்க இருக்கிறார்.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டின் ஆளுநராக ரவி சங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என தகவல்!

Jeba Arul Robinson

கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் விரைவில் மாறும் : அமைச்சர் பெரிய கருப்பன்

Ezhilarasan

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடும்: முதல்வர்!

Saravana Kumar