இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39 ஆயிரத்து 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுப் பாதிப்பு பெரும்பாலான மாநிலங்களில் குறைந்து வருகிறது. ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருந்த கொரோனா தினசரி பாதிப்புகள் சமீபகாலமாக குறைந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 35 ஆயிரத்து 968 பேர் குணமடைந்துள்ளர்.
461-பேர் தொற்றுப் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். தொற்றுப் பாதிப்புடன் 4 லட்சத்து 11 ஆயிரத்து 189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 18 லட்சத்து 99 ஆயிரத்து 874 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 43 கோடியே 51 லட்சத்துக்கு 96 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.







