17 ஆண்டுகளாக சினிமாவில் சாதித்துவரும் நயன்தாரா

கதாநாயகர்களின் பிம்பத்தால் மட்டுமே படங்கள் ஓடிக் கொண்டிருந்த சமயத்தில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிய நயன்தாரா. காதல் காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் கதாநாயகிகள் பயன்படுத்தி கொண்டிருக்கும் காலத்தில், சிறப்பாக நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம்…

கதாநாயகர்களின் பிம்பத்தால் மட்டுமே படங்கள் ஓடிக் கொண்டிருந்த சமயத்தில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிய நயன்தாரா. காதல் காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் கதாநாயகிகள் பயன்படுத்தி கொண்டிருக்கும் காலத்தில், சிறப்பாக நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

2005-ஆம் ஆண்டு ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நயன்தாரா. கிராமத்து பின்னணி கொண்ட கதாபாத்திரத்தில் தனது நடிப்பை தொடங்கி, பின்னர் அந்த இமேஜை மாற்றி அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பிக்க துவங்கினார்.

இவ்வாறு சீராக சென்று கொண்டிருந்த நயன்தாராவின் கேரியரில் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சிறிய இடைவெளி ஏற்பட்டது. அதனால், திரை உலகில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு அதிலிருந்து மீண்டு தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி தற்போது அசத்தி வருகிறார்.

அண்மைச் செய்தி: ‘‘தீட்சிதர்களிடமே கோவில் நிர்வாகம் இருக்க வேண்டும்’ – வி.கே.சசிகலா’

தனிப்பட்ட வாழ்வின் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்த நயன்தாரா முன்பை விட சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். மாயா, கோலமாவு கோகிலா, நானும் ரவுடி தான், அறம் போன்ற படங்களின் மூலம் தனக்கான தனி இடத்தை உருவாக்கி, கதாநாயகியே படத்தை தாங்கி செல்லும் வகையிலான படங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்து அதில் வெற்றியும் பெற்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், நானும் ரவடி தான் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 6 ஆண்டுகாலமாக காதலில் இருந்த நயன்தாராவுக்கு தற்போது திருமணம் உறுதியாகியுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் எளிய முறையில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்து முடிந்த நிலையில் திருமணம் பிரமாண்டமாக நாளை நடத்தப்படுகிறது.

– தினேஷ் உதய்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.