‘தீட்சிதர்களிடமே கோவில் நிர்வாகம் இருக்க வேண்டும்’ – வி.கே.சசிகலா

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது. அது நல்லது அல்ல என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீழ் அருங்குணம் குச்சிபாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றின் தடுப்பணை…

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது. அது நல்லது அல்ல என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீழ் அருங்குணம் குச்சிபாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றின் தடுப்பணை அருகே மூழ்கி சிறுமிகள் உட்பட ஏழு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.

அண்மைச் செய்தி: ‘24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்க அனுமதி’

இந்நிலையில் அரசியல், கட்சி தலைவர்கள் நேரடியாக உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கு சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, வி.கே.சசிகலா அருங்குணம் குச்சிபாளையம் கிராமத்தில் உயிரிழந்த ஹரிப்ரியா, சுமிதா, சங்கவி, மோனிஷா, நவநீதா ஆகியோரின் இல்லங்களுக்கு சென்று அவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இது இயற்கையான மரணம் என்பதை எடுத்துக்கொள்ள முடியாது, மக்களை காப்பாற்றுவது அரசின் வேலை, ஆற்றில் இது போன்று மண் அள்ளப்பட்டுவதை அரசு தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும், அது மாவட்ட நிர்வாகத்தின் வேலை, அதனை மாவட்ட ஆட்சியர் கவனித்திருக்க வேண்டும் என குற்றச்சாட்டு தெரிவித்த அவர், மாவட்ட நிர்வாகமும், அரசும் தோல்வி அடைந்துள்ளது எனவும், இதனாலேயே 7 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை மூடவே தற்போதைய அரசு செயல்படுகிறது எனவும் திராவிட மாடல் என திமுக அரசு தற்போது பேசி வருகிறது. ஆனால், அண்ணா திமுக ஏற்கனவே திராவிட மாடலை உருவாக்கி சமூக நீதியை செயல்படுத்தி வந்தது என குறிப்பிட்டார். மேலும், அதிமுக ஆட்சிகாலத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பல திட்டங்களை சமுக நீதிநோக்கோடு செயல்படுத்தியதாகவும், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட திட்டத்தை ரத்து செய்தது தான் உங்கள் திராவிட மாடலா? என சசிகலா கேள்வி எழுப்பினார்.

நடராஜர் கோவில் விவகார குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது எனவும், அது அரசுக்கு நல்லது அல்ல என கருத்து தெரிவித்த அவர், நீதிமன்ற உத்தரவுப்படி தீட்சிதர்களிடமே கோவில் நிர்வாகம் இருக்க வேண்டும் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.