நடிகை நயன்தாராவிற்கு விரைவில் திருமணம்?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ஏற்கனவே…

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ஏற்கனவே 2 முறை காதல் முறிவை சந்தித்து மூன்றாவதாக இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா

 

 

சுமார் 6 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி நயன்தாராவை குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. அவர்களது நிர்ப்பந்தம் காரணமாக நயன்தாராவும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டதாகவும் மலையாள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனால் அடுத்த சில மாதங்களில் நயன்தாரா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை நயன்தாரா கைவசம் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர சில படங்களை தயாரிப்பதிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.