முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: அதிமுக

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக தீர்மானம் இயற்றியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

சட்டமன்ற தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் நடைபெற்று வரும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் என்பதால், அதிமுகவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள், வியூகங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலை யில், அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டியிருப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை காக்கும் வகையில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். மக்கள் படும் துயரங்களை மனதில் கொண்டு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் விலையில் ஐந்து ரூபாயும் டீசல் விலையில் 4 ரூபாயும் குறைப்பதாகச் சொன்ன திமுக, அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

சட்டமன்ற தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ள திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் தாய்மார்களின் ஆதரவுடன் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்.

விவசாயிகளிடம் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அதிமுகவின் 50-வது ஆண்டு பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாகவும் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement:
SHARE

Related posts

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடம்!

Sathis Sekar

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,643 பேருக்கு கொரோனா

Gayathri Venkatesan

தாய், மகள் வெட்டிபடுகொலை!