முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி 20: அதிரடி காட்டுமா இந்திய பெண்கள் அணி?

இந்தியா -இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் முதல் டி-20 கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணியளவில் தொடங்குகிறது.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது.

இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முதலாவது போட்டி இன்று இரவு தொடங்குகிறது. நார்த்தம்டனில் தொடங்கும் இந்த போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் அணி களமிறங்குகிறது.

கடந்த தொடர்களை இந்திய பெண்கள் அணி இழந்துள்ளதால், இந்த தொடரை வெல்லும் கட்டாயத்தில் இருக்கிறது. இந்திய பெண்கள் அணி தனது பேட்டிங்கில் அதிரடி காட்டினால் மட்டுமே பலம் வாய்ந்த அணியாக இருக்கும் இங்கிலாந்தை வெல்ல முடியும்.

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி, பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிரட்டி வருகிறது. அதனால் அந்த அணி தெம்பாக இருக்கிறது. இந்திய நேரப்படி இன்றிரவு 11 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Advertisement:
SHARE

Related posts

மநீம முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன் திமுகவில் இணைந்தார்

Jeba Arul Robinson

இந்தியா அளவில் கொரோனா பாதிப்பின் நிலவரம்!

Gayathri Venkatesan

மற்றுமொரு ஊரடங்கைத் தாங்கும் நிலையில் தமிழக மக்கள் இல்லை : மு.க.ஸ்டாலின்

Ezhilarasan